SELANGOR

‘அப்டவுன் ஷா ஆலம் கொம்லெக்ஸ்’: நியாயமான வாடகை கருத்தில் கொள்ளப் படும்

ஷா ஆலம், மே 25:

மாநில அரசாங்கம் மற்றும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு வாரியம்  (பிகேஎன்எஸ்) இணைந்து ‘அப்டவுன் ஷா ஆலம் கொம்லெக்ஸ்’ கட்டி முடிக்கப்பட்டவுடன் வியாபாரிகளுக்கு  நியாயமான வாடகை கருத்தில் கொண்டு செயல்படுவதை உறுதி செய்யும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மாநில அரசாங்கம் மற்றும் பிகேஎன்எஸ் கட்டுமான பணிகள் நடைபெற்று  வந்த போதும் வியாபாரிகள் தற்காலிகமாக கடைகள் ஏற்படுத்தி அவர்களின் வருமானம் பாதிக்கப் படாமல் உறுதி செய்யும் என்று விவரித்தார்.

”   மிக நவீனமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும், அதேவேளையில் கடைகளின் வாடகை நியாயமான முறையில் இருக்கவும் நான் உத்தரவாதம் அளிக்கிறேன். மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வந்த போதும் மாநில அரசாங்கம் வியாபாரிகளின் வாணிபத்தை பாதிக்கவில்லை. அப்படி வியாபாரிகளுக்கு தடங்கல் ஏற்பட்டால் வருமானம் பாதிக்கப் படும். மாநில அரசாங்கம் சிறப்பு ஒதுக்கீட்டில் இதை கருத்தில் கொண்டு தற்காலிகமாக கடைகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளது,” என்று கூறினார்.

 

AZMIN ALI (2)

 

 

 

 

 

 

‘அப்டவுன் ஷா ஆலம் கொம்லெக்ஸ்’ அடிக்கல் நாட்டு விழாவைை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டத்தோ ஸ்ரீீ முகமட் அஸ்மின் அலி, இங்கு வியாபாரம் செய்யும் வணிகர்கள் 2006-இல் இருந்து இந்த வளாகத்தில் உள்ளதாக கூறினார்

”   புதிய வளாகம் கட்டி முடித்த பிறகு, கடைகள் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கட்டளை இடப்பட்டுள்ளது. அதேவேளையில் வாணிப வகையில்   நியாயமான முறையில் பிரித்துக் கொடுக்கப்படும்,” என்று கூறினார்

‘அப்டவுன் ஷா ஆலம் கொம்லெக்ஸ்’ பிகேஎன்எஸ் பூகீீீஸ் வடிவமைப்பு கொண்டு ரிம 30 மில்லியனை கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேம்பாட்டு பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று 2019 அக்டோபரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Pengarang :