SELANGOR

ரிம 5 மில்லியன் செலவில் கிளினிக் கட்டப்படும்

கிள்ளான், மே 25:

மாநில அரசாங்கம் ரிம 5 மில்லியன் ஒதுக்கீடு செய்து 7-வது வகை கிளினிக் கட்டப்படும் என்றும் கிள்ளான் மூன்றாவது பாலத்தின் கட்டுமான பணிகளால் பாதிக்கப்பட்ட கிராம சுகாதார கிளினிக் பதிலாக இது இருக்கும் என்று சிலாங்கூர் மாநில கணக்கறிக்கை குழு தலைவர் எங் சியூ லிம் கூறினார்.

மாநில அரசாங்கம் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து புதிய நவீன கிளினிக்கை 11/2 ஏக்கர் நிலத்தில் கட்டவுள்ளதாக தெரிவித்தார். ஆக மாநில அரசாங்கம் மேம்படுத்த உள்ள கிளினிக் ஆரம்ப திட்டத்தை விட பெரிய அளவில் உள்ளதாக கூறினார். மேலும் இந்த கிளினிக் எதிர் வரும் ஜூன் 15-இல் மேம்பாட்டு பணிகள் முடிந்து விடும் என்று கணக்கறிக்கை குழுவினருடன் இணைந்து கிள்ளான் மூன்றாவது பாலத்தை மேற்பார்வை இட்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

அதேவேளையில், டாக்டர் ரானி கூறுகையில் இந்த கிளினிக் மலேசியாவில் முதன் முறையாக கட்டப் படுகிறது என்று விவரித்தார்.


Pengarang :