SELANGOR

உல்லாச விடுதி உடைப்பு: ஜமால், மாநில அரசாங்கத்திற்கு ரிம 6,000 இழப்பீடாக வழங்க வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 23:

கோலா லம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் நேற்று, சுங்கை பெசார் தொகுதி அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ் மாநில அரசாங்கம், சபாக் பெர்னாம் மாவட்ட மன்றம் மற்றும் சபாக் பெர்னாம் மாவட்ட மற்றும் நில அலுவலகம் ஆகியவற்றின் மீது தனது உல்லாச விடுதியான செகின் பிஸர்மேன் விலேஜ் ஹோட்டல் & ரெசோட்-ஐ உடைத்து சீல் வைத்ததை அடிப்படையில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதியான சைட் பைஃசால் சைட் அமீர், ஜமாலை வழக்கு செலவுத் தொகையாக ரிம 6,000-த்தை மூன்று பிரதிவாதிகளுக்கு வழங்குமாறு தீர்ப்பளித்தார்.

RESORT JAMAL

 

 

 

 

2016-இல் டிசம்பர் 28 தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன்னை அரசியல் ரீதியாக பழி வாங்குவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் ஜமால் இழப்பீடாக ரிம 140,000 மூன்று பிரதிவாதிகள் தமக்கு வழங்குமாறு நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது அனைவரும் அறிந்ததே.

#கேஜிஎஸ்


Pengarang :