SELANGOR

செல்கேட்: பெடுலி சேஹாட் திட்டம் மக்களிடையே வரவேற்பு, பதிவு தொடர்ந்து அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூன் 27:

சிலாங்கூர் மக்களிடையே பெடுலி சேஹாட் சுகாதார திட்டம் தொடர்ந்து பிரபலமாகி வருகிறது. இது பொது மக்களின் பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதில் மூலம் தெரிகிறது என்று செல்கேட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, நூர் ஹிஷாம் கௌத் கூறுகையில் இந்த அதிவேக பதிவு எண்ணிக்கை மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் சில அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம் என்று உறுதிபடுத்தினார்.

”    இறைவன் அருளால் இந்த நன்முயற்சி மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. சிலாங்கூர் மாநிலம் முழுவதும் சுமார் 30-க்கும் மேற்பட்ட பிரச்சாரங்களை மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் சில அரசு சார்பற்ற இயக்கங்களோடு மேற்கொண்டது. இந்த திட்டத்தில் செல்கேட் வெறும் செயல்பாட்டு நிறுவனமாக இருந்தாலும், தகவல் ஊடகங்களின் வழி விளம்பரம் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது,” என்று கூறினார்.

PEDULI SIHAT

 

 

 

 

பெடுலி சேஹாட் திட்டத்தில்  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிறுவனமான செல்கேட் குழுமம், மாநில அரசாங்கத்தின் இலக்கான ஒரு மில்லியன் சுகாதார அட்டை பங்களிப்பை 2017 இறுதிக்குள் அடைந்து விடும் என்று உறுதியாக கூறினார்.

இந்த எண்ணிக்கை பி40 குடும்பங்களின் அடிப்படையில்  250,000 குடும்பங்கள் பதிவு செய்ய உத்தேசம் கொண்டு செயல்படும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் தலா நான்கு பேர் வீதம் கணக்கில் கொண்டு கண்டிப்பாக இலக்கை அடைவோம் என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :