NATIONAL

‘ஓப்ஸ் செலாமாட்’: விபத்துகள் அதிகரிப்பு, 53,101 சம்மன் வெளியாக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 28:

‘ஓப்ஸ் செலாமாட் ‘ 11/2017 தொடங்கி ஒன்பதாவது நாளில் 6,800 சாலை விபத்துகள் சிலாங்கூர், கோலா லம்பூர் மற்றும் பேராக் மாநிலங்களில் நடந்தது என்று அதன் மத்திய பகுதி செயல் அதிகாரி சூப்ரிடேண்டன் முகமட் ராடி அப்துல் ரஹ்மான் கூறினார். இது கடந்த ஆண்டை விட 729 சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளதாகவும் ‘ஓப்ஸ் செலாமாட் ‘ 2016-இல் 6,071-ஆக எண்ணிக்கை இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

”    ஆனாலும் மரணம் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகள் 22 அல்லது 37% பதிவு செய்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் இது 23 அல்லது 38% -ஆக கோலா லம்பூர்,சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், மேற்கண்ட மூன்று மாநிலங்களில் சாலை பயனீட்டாளர்களுக்கு 53,101 போக்குவரத்து சம்மன்கள் வழங்கப்பட்டன என்றும் விவரித்தார். கடந்த ஜூன் 18-இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஓப்ஸ் செலாமாட் ‘ நடவடிக்கையில் வேகக் கட்டுப்பாடு மீறிய வாகனமோட்டிகளுக்கு 14,965 சம்மன்களும், போக்குவரத்து விளக்குகளை பின்பற்றாத குற்றங்களுக்கு 1000 சம்மன்களும் மற்றும் கைப்பேசிகள் பயன்படுத்திய குற்றங்களுக்கு 558 சம்மன்களும் வழங்கப்பட்டன என்று முகமட் ராடி அப்துல் ரஹ்மான் கூறினார்.

சாலை பயனீட்டாளர்கள் வாகனங்களை பயன்படுத்தும் பொது கவனமாகவும் மற்றும் சாலை விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

#கேஜிஎஸ்


Pengarang :