SELANGOR

சென்றல் ஸ்பெக்ட்ரம் நீண்டகால திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது

கிள்ளான், ஜூலை 4:

   சென்றல் ஸ்பெக்ட்ரம் நிறுவனம்  (சிஎஸ்எஸ்பி) தொடர்ந்து வாணிபத்தில் லாபம் பெற நீண்டகால அடிப்படையிலான திட்டத்தை தீட்டி உள்ளது என்று அதன் தலைமை செயல் அதிகாரி, மாமூட் அபாஸ் கூறினார். சிஎஸ்எஸ்பியின் திட்டங்களில் பொருட்கள் சேகரிப்பு மைய வாடகை சேவை மற்றும் வாணிப ரீதியிலான கட்டிடங்கள் வாடகை போன்றவை அடங்கும் என்றார்.

   ஆனாலும், மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்த போதுமான கையிருப்பு இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்று விவரித்தார்.

”  எதிர் காலத்தில் தொழில் நிலங்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்படும். மேலும் கையிருப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே போகும். ஆக, நாம் நீண்டகால அடிப்படையிலான திட்டத்தை தீட்டி, மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வெற்றி பெற முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதற்கு முன்பு, சிஎஸ்எஸ்பி பூலாவ் இண்டா தொழில் பேட்டையை விளம்பரப்படுத்தி வந்தது. நிர்வகிக்கப்படும் தொழில் பேட்டை, வேலியிடப்பட்ட மற்றும் பாதுகாவலர் கொண்ட தொழில் பேட்டை, பசுமைமிக்க மற்றும் 20 கிலோமீட்டர் தூரத்தில் சைக்கிள் ஓடுபாதை போன்ற அம்சங்கள் கொண்டதாக இது விளங்குகிறது.

பூலாவ் இண்டா தொழில் பேட்டை 3500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் ரிம 15 பில்லியன் முதலீடுகளை கொண்டு செயல்பட ஆற்றல் கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது கட்டமாக 800 ஏக்கர் நிலப்பரப்பில் ரிம 1.2 பில்லியன் மதிப்பில் தொழில் பேட்டை அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :