SELANGOR

புவிப்பெயர்ச்சி ஏற்பட்டதிற்கு கனரக வாகனங்கள் காரணம்?  

செமின்ஞே, ஜூலை 4:

பண்டார் சன்வே, தாமான் டேசா மேவாவில்  கனரக வாகனங்களின் அதிகமான படையெடுப்பு புவிப்பெயர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் தாமான் டேசா மேவா, இண்டா ஓட்டர் கழிவுகள் கசிந்து வெளியாகி துர்நாற்றத்தை  ஏற்படுத்தியதாக காஜாங் நகராண்மை கழகத்தின் பகுதி 15-இன் உறுப்பினர் நோர்ஸானாலீலா முகமட் பாஃசில் கூறினார். காகாஸான் பிரிஹாதீன் செமின்ஞே (ஜிபிஎஸ்) எனப்படும் சுற்று சூழல் அமைப்பை சேர்ந்தவர்கள் இண்டா ஓட்டர் கழிவுகள் வெளியாகி உள்ளதை கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினரை தொடர்பு கொண்ட செயல் பாராட்டக்கூடியது. பொது மக்கள் இவர்களை பின்பபற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜாங் நகராண்மை கழகத்தின் பகுதி 15-இன் உறுப்பினர் நோர்ஸானாலீலா முகமட் பாஃசில், பொது மக்களை அமைதி காக்கும் படியும் மற்றும் இண்டா ஓட்டர் கசிவு ஏற்பட்டு விட்டது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் உண்மை நிலவரத்தை கேட்டுப் பெற்றிருக்கலாம் என்று தெரிவித்தார்.

”   இந்த வேளையில், சிலாங்கூர் ஊடகம் மற்றும் செமின்ஞே சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் சேவை மையம் ஆகியோர் சிறந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள் . மக்களின் எதிர் நோக்கும் சிக்கல்களை தீர்க்க முனைப்பு காட்டிய அனைவருக்கும் நன்றி கடமைப்பட்டுள்ளேன்,” என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :