SELANGOR

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டு திட்டங்கள் மக்களுக்கு சுமையாக இருக்காது

காஜாங், ஜூலை 18:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மேம்பாட்டு திட்டங்கள் மக்களுக்கு சுமையாக இருக்காது என்றும் அவை சிறந்த அடைவுநிலை கொண்டதாகவும் உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தரமில்லாத மேம்பாட்டு திட்டங்கள் பல்வேறு வழிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் எதிர் காலத்தில் நாட்டிற்கு பேரிழப்பு நடக்கக்கூகூடிய சாத்தியம் இருக்கும் என்று தெரிவித்தார்.

”   சிலாங்கூரில் நிர்மாணிப்பு பணிகள் தரமானதாக உறுதி செய்யப்படும். சில நேரங்களில் மேம்பாட்டு பணிகள் சுற்றுசூழல் பாதிக்கப்படும், பொது மக்கள் திடீர் வெள்ளம் மற்றும் பல தடங்கல்களை எதிர் நோக்க நேரிடும்,” என்று பண்டார் பாரு பாங்கி-காஜாங் 2-பண்டார் டெக்னாலஜி காஜாங் அடுக்குமாடி சந்திப்பு திறப்புவிழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, அஸ்மின் அலி, சிலாங்கூரில் உள்ள எல்லா 12 ஊராட்சி மன்றங்களும் பொறுப்புள்ள முறையில் செயல்பட்டு மேம்பாட்டு நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

#கேஜிஎஸ்


Pengarang :