SELANGOR

சிலாங்கூர் மாநில அரசின் பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்)

சிலாங்கூர் இன்றுவின் கண்ணோட்டம்:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்காக பல்வேறு பரிவு மிக்க திட்டங்களை ஆக்கப்பூர்வமாய் முன்னெடுத்து வருகிறது.மாநில அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் மக்கள் மத்தியில் நன் வரவேற்ப்பினை பெற்று வருவதோடு அஃது தொடர்ந்து மக்கள் மாநில அரசாங்கத்திற்கும் மந்திரி பெசாருக்கு தனித்துவ ஆதரவையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்கள் பிற மாநிலங்களில் இல்லாத ஒன்றாகவும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவும் விளங்குகிறது.அவ்வகையில்,இத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்றைய நாள் வரை எவ்வகையில் மக்களுக்கு அஃது பயனாகவும் அதன் மூலம் மக்கள் பெற்ற நன்மைகள் யாவை என்பது குறித்தும் சிலாங்கூர் இன்று வட்டார இந்தியர் தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் மத்தியிலும் ஒரு கண்ணோட்டத்தை முன்னெடுதத்து.
மக்கள் வரவேற்கும் பெடுலி சிஹாட் சுகாதார அட்டை
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அறிமுகம் செய்த பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களில் இவ்வாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பெடுலி சிஹாட் சுகாதார அட்டைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருப்பதாகவும் ஆரோக்கியமான சிலாங்கூர் வாழ் மக்களை உருவாக்குவதற்கு இத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது.

மாநில அரசாங்கத்தின் இத்திட்டம் சிலாங்கூர் வாழ் மக்களின் சுகாதார ரீதியிலான பொருளாதார சுமையினை குறைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்றை சூழலில் மருத்துவ செலவினம் கட்டுப்பாடற்று தொடர்ந்து உயர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் பெடுலி சிஹாட் திட்டம் மக்களுக்கான ஆரோக்கியமான திட்டமாய் அமைந்துள்ளது.
(மகேஸ்வரன் – புஞ்சா அலாம் வட்டார கவுன்சிலர்)

மனிதநேய திட்டமாய் இலவச நீர்
மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக விளங்கிடும் நீரை சிலாங்கூர் மாநில அரசாங்கம் மனிதநேய சிந்தனையோடு மாதம் ஒன்று சுமார் 20 கனமீட்டரை இலவசமாக வழங்குவது பெரும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது.அதேவேளையில், மாநில அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றாக விளங்கிடும் சிறுத்தொழில் வியபாரிகளுக்கான உதவிகள் சிலாங்கூர் மாநில சிறுத்தொழில் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பையும் மாநில அரசாங்கத்தின் மீதிலான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

(கிருஸ்ணன் செல்லையா – ஆயீர் ஈத்தாம் கிராமத்து தலைவர்)
மகளிர் நலத்திட்டங்கள் அமோக வரவேற்ப்பு
சிலாங்கூர் மாநில அரசாங்கம் பெண்கள் மீதும் தனித்துவ கவனம் செலுத்தி அவர்களின் மேம்பாட்டு வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருவது சிலாங்கூர் வாழ் மகளிர் மத்தியில் அமோக வரவேற்ப்பினை பெற்றுள்ளது.குறிப்பாக விவேகமும் ஆற்றலும் மிக்க மகளிரை உருவாக்குவதற்காக மாநில அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் ஆற்றல் மிக்க மகளின் மையம் செயல்பாடுகள் (PWB) விளங்குகிறது.அதேவேளையில்,மகளிர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியுள்ள மாநில அராசங்கம் வழங்கி வரும் இலவச மார்பக பரிசோதனையும் சிலாங்கூர் மாநில மகளிரின் அமோக வரவேற்ப்பினை உச்சமாக நிலைக்கொண்டுள்ளது.

(திருமதி.தேவி முனியாண்டி – அரசு சாரா இயக்கம்)
மூத்தக்குடிகள் நலன் காத்தல்
நாட்டிற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ள சிலாங்கூர் மாநிலத்தின் மூத்தக்குடிகளுக்கு பெருநாள் காலங்களில் வழங்கப்படும் உதவி நிதி பற்றுச்சீட்டு அவர்களின் பெருநாள் கொண்டாட்டங்களை சிறப்பு மிக்கதாய் உருவாக்குகிறது.வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இது தனித்துவமாய் அமைந்துள்ளது.அதேவேளையில்,இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மூத்தக்குடிகள் மரணத்தை தழுவினால் அவர்களின் குடும்பங்களுக்கு மரணசகாய நிதியாய் வெ.2500 வழங்கப்படுகிறது.இந்த நிதியின் மூலம் இறுதிசடங்கினை எவ்வித சிக்கலுமின்றி செய்து முடிப்பதற்கு இவை வழிகோலும்.மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பின் நலனிலும் அக்கறையும் பரிவும் கொண்டிருப்பதுதான் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மாபெரும் தனித்துவம் எனலாம்.

(இராமசந்திரன் – ஆர் ஆர் ஐ கிராமத்து தலைவர்)
சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல்வேறு பரிவுமிக்க நலத்திட்டங்களை மாநில ஆட்சியை கைப்பற்றிய கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி இன்றைய வரை மிகவும் சிறப்பாகவும் விவேகமாகவும் மேற்கொண்டு வருகிறது.குறிப்பிட்ட பிரிவிற்காகவும் குறிப்பிட்ட இனத்திற்காகவும் குறிப்பிட்ட வர்க்கத்திற்காகவும் இல்லாமல் சிலாங்கூரில் பிறக்கும் குழந்தை முதல் இம்மாநிலத்தின் மூத்தக்குடிகள் வரை பல்வேறு நிலைகளில் அதன் நலத்திட்டங்கள் விரிவடைந்துள்ளது.

கல்வி,பொது சேவை,வர்த்தகம், சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க நலத்திட்டங்கள் சரியான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.அமல்படுத்தப்பட்ட இத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பும் ஆதரவும் கிடைத்துள்ள நிலையில் இத்திட்டங்கள் தொடர்ந்து சிலாங்கூர் வாழ் மக்களின் ஆதரவு மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து நிலைத்திருக்கவும் பெரும் சான்றாக விளங்குகிறது.

இதற்கிடையில்,மாநில அரசாங்கத்தின் இத்திட்டம் இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் வரவேற்ப்பினை பெற்றுள்ளதோடு அதன் மூலம் நன்மையும் அடைந்துள்ளனர்.இருப்பினும்,இன்னமும் இத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் ஆழமாய் பதிவு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் சிலாங்கூர் இன்றுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு கிராமத்து தலைவர்கள்,கவுன்சிலர்கள்,இந்திய தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் ஆகியோருக்கும் உண்டு.அதனை நாம் ஒவ்வொருவரும் விவேகமாய் முன்னெடுக்க வேண்டும்.அதேவேளையில்,இத்திட்டம் உயர்க்கல்வி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் உயிர்க்கொள்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

 

ஆக்கம்,

கு.குணசேகரன் & சிவக்குமார்


Pengarang :