NATIONAL

6 கெஎல்ஐஏவை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் போதைமருந்து கடத்திச் செல்ல குண்டர் கும்பலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 2:

காவல்துறை, மலேசிய அரச சுங்கத்துறை இலாகாவை சேர்ந்த ஆறு அதிகாரிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை கைது செய்தனர். நாட்டிற்கு போதைமருந்து கடத்தலில் குண்டர் கும்பலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை புக்கிட் அமான் குற்ற விசாரணை பிரிவு இயக்குனர் டத்தோ ஸ்ரீ முகமட் ஷாலே பெர்னாமாவிடம் உறுதிப் படுத்தினார்.

”  நாங்கள் அந்த ஆறு நபர்களை கைது செய்து விட்டோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,” என்று மிக சுருக்கமாக கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் குண்டர் கும்பல்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பல்வேறு விதமான போதைமருந்து கடத்திச் செல்ல உதவியதாக குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரிக்க படுவார்கள் என்று கூறப்படுகிறது. அனைவரும் பாதுகாப்பு குற்றம்  (சிறப்பு நடவடிக்கை) 2012 (சோஸ்மா) கீழ் விசாரிக்க படுவார்கள்.

இதனிடையே, சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ தி.சுப்பிரமணியம், தனது தரப்பு நேர்மையில்லாத மற்றும் பதவி துஷ்பிரயோகம் செய்யும் எந்த ஒரு அதிகாரிகளையும் அனுசரிக்காது என்று ஆணித்தரமாக பெர்னாமாவிடம் கூறினார்.

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்


Pengarang :