SELANGOR

தைப்பே அரசாங்கம் 150 சிலாங்கூர் பல்கலைக் கழக மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம்

ஷா ஆலம், செப்டம்பர் 7:

தைப்பே அரசாங்கம் சிலாங்கூர் மாணவர்களுக்கு  கல்வித்துறை மற்றும் விவேக தொழில் நுட்பத் துறை ஆகிய துறைகளில் மேற்கல்வி தொடர கல்வி உபகாரச் சம்பளம் வழங்கவுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த நல்ல செய்தியை தைப்பே மாநகர அரசாங்கம் அதன் துணை மேயர், லின் சின் ரோங் வழியாக தெரிவித்துள்ளது என்றார்.

”   தைப்பே மாநகரம் 150 முதுகலை மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளது. ஆனாலும், நான் மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம்மும், இதில் நமது மாநில இளையோர் நன்கு பயன் பெற சரியான கல்வி திட்டத்தை தைவானில் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம். இது சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு ஒரு தலைசிறந்த அங்கீகாரம். நாம் தொடர்ந்து மாநில மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருவோம் என்று உறுதி கூறுகிறேன்,” என்று செதியா சிட்டி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

#கேஜிஎஸ்


Pengarang :