NATIONAL

நெகிரி செம்பிலான் அறவாரிய கல்வி கடனுதவியில் இனரீதியாக மாணவர்கள் புறக்கணிப்பா?

சிரம்பான், டிசம்பர் 1:

நெகிரி செம்பிலான் அறவாரியம் நெகிரி செம்பிலான் மாணவர்களுக்கு மலேசிய அரசாங்க பல்கலைக்கழகம் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் மேற்க்கல்வி தொடர்வதற்கு வட்டியில்லாத கடனுதவியை வழங்கி வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு ரிம 78 மில்லியன் கடனுதவி வழங்கியுள்ளது. இதில் ரிம 76 மில்லியன் மலாய்கார மாணவர்களுக்கு வழங்கியுள்ள வேளையில் வெறும் ரிம 2 மில்லியன் மட்டும் சீனர் மற்றும் இந்தியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 2016-ஆம் ஆண்டு மொத்தம் ரிம 86 மில்லியன் கல்விக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் ரிம 84 மில்லியன் மலாய்கார மாணவர்களுக்கும் வெறும் ரிம 2 மில்லியன் மட்டும் சீனர் மற்றும் இந்தியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஒட்டுமொத்தத்தில் 2 சதவீதம் மட்டும் தான் சீனர் மற்றும் இந்தியர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அந்தோனி லோக் குறிப்பிட்டார். மலாய்கார மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடனுதவியை நாங்கள் கேள்வி எழுப்பவில்லை, ஆனால் ஏன் சீனர் மற்றும் இந்திய மாணவர்களுக்கு இன்னும் அதிகமான வட்டியில்லாத கல்விக் கடனுதவி வழங்கவில்லை என நீலாய் சட்ட்மனற உறுப்பினர் ஜ. அருள் குமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாநில முதல்வரும நெகிரி செம்பிலான் அறவாரியத்தின் தலைவர் முகமட் ஹாசான், சீனர் மற்றும் இந்திய மாணவர்கள் அதிகமானவர்கள் இந்த கடனுதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்று ஒரு பதிலை அளித்தார். இந்த நெகிரி செம்பிலான் அறவாரிய இயக்குனர் வாரியத்தில் மலாய்காரர்கள் அல்லாதவர்களை பிரதிநிதித்து மாநில ம.இ.கா தொடர்புக்குழுத் தலைவர் மாணிக்கம் மற்றும் மாநில ம.சீ.ச தலைவர் லிம் சின் பூய் இடம் பெற்றுள்ளனர்.

அதிகமான சீனர் மற்றும் இந்தியர்களை இந்த வட்டியில்லாத கல்வி கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யவில்லை என்றால் ஏன் இந்த வ்ட்டியில்லாத கல்விக் கடனுதவியை நெகிரி செம்பிலான் இந்தியர்கள் மத்தியில் விளம்பரப்படுத்தவில்லை என ஜ. அருள் குமார் கேள்வி எழுப்பினார். மேலும் கூறுகையில் இயக்குனர் வாரியக் குழுவில் இருக்கும் இவர்கள்தான் அந்த அறவாரியத்தில் உள்ள வசதிகளை மக்களுக்கு தெரிவிக்கும் கடமை உள்ளது மற்றும் பதவியை மட்டும் வைத்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கக்கூடாது என நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணியின் இளைஞர் பிரிவுத் தலைவருமான ஜ. அருள் குமார் சாடினார்.

#வீரத் தமிழன்


Pengarang :