NATIONAL

பாக்காத்தான் ஹாராப்பான் மகளிர், 7 அடிப்படைக் கொள்கைகளை வகுத்துள்ளது

காஜாங், ஜனவரி 6:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மகளிர் அணியினர் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள ஏழு அடிப்படை கொள்கைகளை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மகளிர் தலைவியான ஸூரைடா கமாரூடின் கூறுகையில், அறிவார்ந்த, திறன்மிக்க மற்றும் அரசியல் கல்வி அறிவு கொண்ட மகளிரை உருவாக்கும் நோக்கில் கூட்டணி அணியினர் இயங்குவார்கள் என்று விவரித்தார்.

மக்களாட்சி சித்தாந்தம், தலைமைத்துவம், இளம் வயது மகளிர் எதிர் காலம், மகளிர் மீது அக்கறை கொண்ட பொருளாதாரம், முற்போக்கு கல்வி, திறன்மிக்க சுகாதாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டங்களின் அமலாக்கம் ஆகிய கொள்கைகளை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மகளிர் அணி வகுத்து செயல் பட தயாராக உள்ளது என கெஅடிலான் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான ஸூரைடா கமாரூடின் கூறினார்.

 

 

 

 

 

#தமிழ் பிரியன்

 


Pengarang :