SELANGOR

ஆசியானில் சிறந்த மாநிலமாக சிலாங்கூர் விளங்க ‘ஸ்மார்ட் சிலாங்கூர்’ பெருந்திட்டம்

ஷா ஆலாம், மார்ச் 4:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் சிந்தனையில் உதித்த ‘ஸ்மார்ட் சிலாங்கூர்’ பெருந்திட்டம் சிலாங்கூர் மாநிலத்தை ஆசியான் வட்டாரத்தில் பிரசித்திபெற்ற மாநிலமாக உருவாக வழிவகுக்கும் மந்திரி பெசார் பெருநிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜா ஷாரின் ஓத்மான் தெரிவித்தார். தற்போது ஸ்மார்ட் சிலாங்கூர் தலைசிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாநில அரசாங்கம், மக்களுக்கு பல்வேறு வழிகளில் சேவையை வழங்கி முக்கிய தலமாக விளங்குகிறது என்றார்.

”   கடந்த 2015-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிலாங்கூர் பெருந்திட்டம் தொடர்ந்து அமலில் உள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் 12 அடிப்படை கூறுகளில் உள்ளடக்கி இருக்கிறது. விவேக அரசாங்கம், கணினிமய உள்கட்டமைப்பு, விவேக போக்குவரத்து & இயக்கம் மற்றும் விவேக கழிவு நிர்வாகம் அதில் உள்ளடக்கியது,” என்று மெலாவாத்தி அரங்கத்தில் நடைபெற்ற  ‘எக்தீவ்8 ஸ்மார்ட் சிலாங்கூர் & ஸ்மார்ட் சிலாங்கூர் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

#தமிழ் பிரியன்


Pengarang :