SELANGOR

ஹிஜ்ரா திட்டம் தொழில் முனைவர்களோடு நெருக்கத்தை வலுப்படுத்துகிறது!!

 

கிள்ளான்,மார்ச் 23: தொழில் முனைவர்களோடு உறவை வலுப்படுத்தவும் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தவும் யயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில் முனைவர்களின் பிள்ளைகளோடு “இண்டோர் கேஃம்” நிகழ்வினை மேற்கொண்டது.

ஜிஹ்ராவின் தலைமை நிர்வாகி ரோஸ்லிம் முகமட் ஹகிர் இது குறித்து கூறுகையில் இஃது நல்லதொரு நன்மையை ஏற்படுத்தும் என்றும் கூறியதோடு சமூக காப்ரெட் நிறுவனங்களின் சமூக கடப்பாடும் ஆகும் என்றார்.

புக்கிட் திங்கி மெக்டோனல் மற்றும் சிலாங்கூர் பொது நூலகம் ஆகியவற்றின் ஆதரவோடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையின் மூலம் ஹிஜ்ர திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அவர்கள் பிள்ளைகள் ஆகியோருடன் நெருக்கமான நல்லுறவை வலுப்படுத்த இது உதவும் என்றார்.

அதுமட்டுமின்றி,இதன் மூலம் தொழில் முனைவர்கள் தொழில் ரீதியில் மட்டும் வெற்றியடையாமல் குடும்பத்தின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் அவர்கள் திறன் மிக்க நிலையில் உயர்வதற்கும் நாம் வழிசெய்கிறோம்.

இந்நிகழ்வில் 12 முதல் 30 வயதிலான தொழில் முனைவர்களின் பிள்ளைகள் பங்கெடுத்தனர்.அவர்கள் பல்வேறு போட்டிகளிலும் கலந்துக் கொண்டனர்.அதேவேளையில் ஹிஜ்ரா தொழில் முனைவர்களின் பிள்ளைகளின் கல்வியிலும் தனித்துவ கவனம் செலுத்துகிறது என்றார்.

மேலும்,யு.பி.எஸ்.ஆர்,பிடி3 மற்றும் எஸ்.பி.எம் மாணவர்களுக்கு தன்முனைப்பு பயிற்சியையும் ஹிஜ்ரா மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

அதுமட்டுமின்றி,யுனிசெல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து உயர்கல்வி சூழல் குறித்த விளக்கத்தையும் அதில் எவ்வாறு வெற்றி அடைவது குறித்த தன்முனைப்பு மற்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் ஹிஜ்ரா மேற்கொண்டுள்ளது.

ஹிஜ்ரா திட்டம் தொழில் முனைவர்களுக்கு அவர்களின் தொழில் சார்ந்து மட்டும் உதவிடாமல் அவர்கள் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் கல்வி ஆகியவற்றின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தனித்துவ அக்கறைக் கொண்டுள்ளது.

ஹிஜ்ரா ஆக்கப்பூர்வ தொழில் முனைவர்களை உருவாக்குவதோடு இம்மாதிரியான திட்டங்களாலும் செயல்பாடுகளாலும் நம்பிக்கையான சமூகத்தையும் உருவாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


Pengarang :