SELANGOR

அதிகாரப்பூர்வ வாகனங்களை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் ஒப்படைத்தனர்

ஷா ஆலாம், ஏப்ரல் 10:

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதால் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.

அவர்கள் மாநில அரசு வாகனங்களை மாநில செயலாளார் டத்தோ முகமட் அமின் அமாட் ஹாயா முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இதற்கு முன்னதாக அரசாங்க வாகனங்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் தொடர்ந்து பராமரிப்பு அரசாங்கமாக அடுத்த அரசு தேர்வு செய்யப்படும் வரை செயல்படுவோம் என்றும் மந்திரி பெசார் கூறினார்.

மேலும்,புதிய அரசாங்கம் தேர்வாவதற்கு முன்னதாக நாங்கள் எந்தவொரு ஆட்சிக்குழு கூட்டத்தையோ அல்லது எந்தவொரு திட்டத்தையும் அங்கீகரிக்கவும் மாட்டோம் எனவும் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் விதிமுதையில் வரையறுக்கப்பட்டிருப்பதற்கு ஒப்ப எங்களின் செயல்பாடும் நடவடிக்கைகளும் இருக்கும் என்றும் மந்திரி பெசார் தெரிவித்தார்.

மாநில சபாநாயகர் ஹன்னா ஹியோ மாநில ஆட்சி கலைக்கப்பட்டது தொடர்பில் தேர்தல் ஆணையத்திற்கு முறையாக தெரிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக மாநில ஆட்சியை கலைப்பதற்கு ஏதுவாக மந்திரி பெசார் சுல்தான் ஷராஃப்புடினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :