ஷா ஆலம், மே 24:
மேலும் 12 அமைச்சர்களின் பெயர்கள் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இந்த எண்ணிக்கை சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரிக்கப் படலாம்.
” கூடிய விரைவில் அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்,” என்று செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
இதற்கு முன்பு 15 அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் கல்வி அமைச்சர், பொருளாதார நலன் அமைச்சர், கிராமப்புற மேம்பாடு அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அடங்கும்.