NATIONAL

மலேசிய நாட்டின் கடன் தொகை ரிம 1 திரிலியனை தாண்டியது

புத்ரா ஜெயா , மே 24:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மறுத்தாலும் தற்போதைய மலேசிய நாட்டின் மொத்த கடன் தொகை ரிம 1,087.3 பில்லியன் ஆகும் என்று புதிதாக நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்ட லிம் குவான் எங் கூறினார். தற்போதைய பிரதமராக பதவியேற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட் திறன்மிக்க , பொறுப்புள்ள மற்றும் வெளிப்படையான தன்மை கொண்ட நிர்வாகத்தை வழி நடத்துவார் என்று உறுதி கூறினார்.

” மத்திய அரசாங்கத்தின் கடன் அளவு ரிம 1,087.3 பில்லியன் அல்லது தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (கெடிஎன்கெ) 80.3% ஆக உள்ளது. அரசாங்கத்தின் ஜாமீன் டனைன்ஃபிரா நேஷனல் நிறுவனம் (ரிம 42.2 பில்லியன் ), கௌகோ ஹோல்டிங்ஸ் நிறுவனம் (ரிம 8.8 பில்லியன் ), பிராசாரானாா மலேசிய நிறுவனம் (ரிம 26.6 பில்லியன்), மலேசிய ரெயில் லிங்க் நிறுவனம் ( ரிம 14.5 பில்லியன்) மற்றும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (ரிம 38 பில்லியன்) போன்ற நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது,” என்று குவான் எங் கூறினார்.


Pengarang :