NATIONAL

டாக்டர் அபிப் – இல்மான் இணை, இளைஞர் பிரிவின் மேம்பாட்டிற்கு பலம்!!

ஷா ஆலம்,ஆகஸ்ட் 06:

கெஅடிலான் கட்சி தேர்தலில் தலைவருக்கு பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அபிப் பஹாருடினும் பொருளாதார மேம்பாடு விவகார அமைச்சரின் செயலாளர் முகமாட் இல்மான் இடாம் துணைத்தலைவருக்கும் போட்டியிடுவது கட்சியின் இளைஞர் பிரிவிற்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்விருவரும் கூட்டாக் கொடுத்த அறிக்கையில் புதிய மலேசியாவை நோக்கியும் புதியதொரு தளம் நோக்கியும் ஆக்கப்பூர்வமான நகர்வுகளை முன்னெடுக்க ஒற்றுமையோடும் புரிந்துணர்வோடும் கைகோர்த்திருப்பதாக கூறினார்கள்.

கட்சியின் இளைஞர் அணியை வலுப்படுத்தவும் சிறந்த இலக்கை நோக்கி கொண்டு செல்லவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட கட்சியின் முதன்மை தலைவர்களோடு கலந்துபேசி விட்டதாகவும் குறிப்பிட்டனர்.

அவர்களின் ஆசியும் ஆதரவும் நன் வரவேற்பையும் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர்கள் கட்சியின் எதிர்காலம் இளைஞர் அணியின் பலத்தில்தான் உள்ளதாகவும் கூறினார்கள்.

அதேவேளையில்,நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் இளம் தலைமுறையின் பங்களிப்பு ஆக்கப்பூர்வமானதாய் அமைந்திருந்ததையும் சுட்டிக்காண்பித்த அவர்கள் நாளைய எதிர்காலத்திற்கு இளம் தலைமுறை மத்தியில் விழிப்புணர்வையும் சிந்தனையையும் உருமாற்றம் செய்தல் அவசியம் என்றும் அப்பணியை செம்மையாக முன்னெடுக்க திட்டங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.


Pengarang :