SELANGOR

ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலுக்கு பின்னர் புதிய ஆட்சிகுழு உறுப்பினர் நியமிக்கப்படுவார்!!

ஷா ஆலம் – ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலுக்கு பின்னர் தான் மாநிலத்தின் இஸ்லாம் சமய விவகாரம்,கல்வி மற்றும் மனிதமூலதன மேம்பாடு பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் நியமிக்கப்படுவார் என மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி தெரிவித்தார்.
இப்பிரிவு மிகவும் முக்கியமான பொறுப்பினை கொண்டது.அதற்கு தகுதியான மற்றும் திறனும் ஆற்றல் மிக்க சிந்தனையும் கொண்ட ஒருவரைதான் நியமிக்க வேண்டும்.அவ்வகையில்,இந்த நியமனம் குறித்து நன்கு ஆராய்ந்து விவேகமான நிலையில் முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.இவ்விவகாரத்தில் அவசரம் காட்டாமல் செயல்பட வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் தலைமைத்துவம் எடுக்கும் முடிவினை ஆதரிப்பதாகவும் கூறிய மந்திரி பெசார் சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலைப் போல் ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலிலும் பாக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பேராசியர் டாக்டர் ஷாஹாருடின் பஹாருடின் மரணம் அடைந்த வேளையில் அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :