SELANGOR

சுங்கை கன்டிஸ், ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலுக்கு சரியான பாடம்?

ஷா ஆலம், செப்டம்பர் 7:

கடந்த ஆகஸ்ட் 4-இல் நடைபெற்ற  சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்த சூழ்நிலை ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலில் ஒரு பாடமாக அமையும் என்று டாரூல் எசான் கல்லூரியின் ஆய்வு குழுவின் தலைவர் கைரூல் அரிப்பீன் முகமட் மூனிர் குறிப்பிட்டுள்ளார். விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வாக்காளர்களை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

” இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் அரசாங்க இலாகாகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மலேசிய தேர்தல் ஆணையம், தகவல் இலாகா மற்றும் மற்ற அரசாங்க நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்ள வேண்டும்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :