SELANGOR

பாஸ் கட்சியின் முன்னாள் சிலாங்கூர் மாநில தேர்தல் இயக்குனர் அமானாவில் இணைந்தார் !!!

ஷா ஆலம், செப்டம்பர் 12:

ஷா ஆலம், செப்டம்பர் 12:

கடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் அம்னோவுடன் பாஸ் ஒத்துழைப்பு வழங்கியதால் சிலாங்கூர் பாஸ் கட்சியின் முன்னாள் தேர்தல் இயக்குனர் ஹைரூல் நிஸாம் தோஹார், பாஸ் கட்சியில் இருந்து வெளியேறி அமானா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைத்த அம்னோவுடன் கைகோர்த்து நிற்கும் நிலையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

” அம்னோ இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள். ஆனால் பாஸ் கட்சியின் தலைமைத்துவம் அம்னோவுடன் தோழமையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருக்கிறது. இதனால், இந்த முடிவை எடுத்துள்ளேன். பாஸ்-அம்னோ இணைந்து பணியாற்றும் முடிவு ஏற்கனவே நான் கேள்வி பட்டுள்ளேன். ஆனாலும், சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தலில் கண்கூடாக பார்க்கிறோம். ஆகவே, இதற்கு மேலும் பாஸ் கட்சியில் இருப்பது வீண் என்று விலகி விட்டேன்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :