SELANGOR

சிப்பாங்கில் மருத்துவமனை கட்ட திட்டம்

சிப்பாங், செப்டம்பர் 23 :

பொது மருத்துவமனை வசதி இல்லாத சிப்பாங் வட்டாரத்தில் அதனை கட்டுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதற்காக இடத்தை ஒதுக்கவும் மாநில அரசாங்கம் திட்டம் வகுத்திருப்பதாக மந்திரி பெசார் அமிரூடின் சஹாரி குறிப்பிட்டார்.
இத்திட்டத்தை முறையாக நிறைவேற்ற தஞ்சோங் ரூஃ பகுதியில் கேம் பீனா நேகாரா பகுதியில் நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவ்விடம் பொது மக்களின் வசதிக்கும் தேவைக்கும் நிறைவான இடமாக இருக்கும் என்றும் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பகுதியில் மாவட்ட மருத்துவமனையை அமைப்பதில் மாநில அரசிற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் கூறிய அவர் இத்திட்டத்திற்கு மத்திய அரசும் ஒத்துழைப்பு வழங்கி மருத்துவமனையை அமைப்பதற்கு போதுமான மானியத்தை ஒதுக்கீடு செய்யும் என தாம் நம்புவதாகவும் கூறினார்.
அந்த புதிய மருத்துவமனையை கட்டுவதற்கு சுமார் 300 மில்லியன் நிதி தேவையாக இருப்பதாகவும் கூறிய அவர் நடப்பில் இங்குள்ள மக்கள் மருத்துவமனை சேவைக்கு இங்குள்ள தனியார் கிளினிக் மற்றும் சைபர்ஜெயா அல்லது சிரம்பான் பொது மருத்துமனைகளை நாடுவதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
தொடர்ந்து கூறிய அவர் இங்கிருந்து சிராம்பன் மருத்துவமனைக்கு மருத்துவ சேவையினை பெறுவதாக சுமார் 500 புகார்கள் பெறப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காண்பித்தார்.சிபாங் மாவட்டத்தை போலவே சபாக் பெர்ணம்,காப்பார்,உலுசிலாங்கூர் உட்பட பிற மாவட்டங்களிலும் மருத்துவமனை வசதி மேம்படுத்தப்படும் என்றார்.


Pengarang :