SELANGOR

தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 லட்சம்

ஷா ஆலம்,  நவம்பர் 23:

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வெ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.

மாநிலத்திற்கான 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி இத்தகவலை தெரிவித்தார்.

இந்நிதிதின் மூலம் இம்மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து சிறந்த இலக்கை நோக்கி பயணிக்கும் என்றார்.

2018ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.50 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் 2019ஆம் ஆண்டுக்கும் அஃது நிலை நிறுத்தப்பட்டது என்றார்.

2008ஆம் ஆண்டில் பாக்காத்தான் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றியது முதல் வெ.40 லட்சம் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2017 தொடங்கி அஃது வெ.50 லட்சமாக உயர்ந்த நிலையில் அடுத்தாண்டுக்கும் அஃது நிலைநிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :