SELANGOR

காடுகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் வெ.5.6 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், நவம்பர் 23:

சிலாங்கூர் மாநிலத்தின் காடுகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் வெ.5.6 மில்லியனை அது சார்ந்த இலாவிற்கு மாநில அரசு ஒதுக்கியிருப்பதாக மந்திரி பெசார் அமிரூடிம் ஷாரி தெரிவித்தார்.

இயற்கை வளமும் எழில் தோற்றமும் கொண்ட இம்மாநில காடுகள் சிலாங்கூர் மாநிலத்தின் பொக்கிசம் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளையும் கவரும் தளமாகவும் விளங்குவதால் அதனை தொடர்ந்து பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இந்நிதி ஒதுக்கப்பட்டதாக 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அவர் குறிப்பிட்டார்.

உளநாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவர்ந்த சிலாங்கூர் மாநிலத்தின் காடுகள் தனித்துவமானது எனவும் கூறிய அவர் இயற்கை சுற்றுசூழலை நாம் பாதுகாப்பதோடு மேம்பாடுகளால் அஃது அழியாமல் பாதுகாப்பது அவசியம் என்றார்.

தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நாம் 4.0 தொழிற்துறை புரட்சியை இலக்காக கொண்டிருக்கும் சூழலில் சிலாங்கூர் மாநிலத்தின் வளமான எதிர்காலத்திற்கு இயற்கை,சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது என்றார்.

அதேவேளையில்,இம்மாநிலத்தின் நிலபரப்பளவில் 30 விழுகாடு காடுகளாய் இருப்பதை அரசு உறுதி செய்யும் எனவும் கூறிய அவர் தற்போதைய நிலையில் அஃது 31.5 விழுகாடு இயற்கை காடுகளாய் இருபதாகவும் கூறினார்.

அவ்வகையில்,சிலாங்கூர் மாநிலத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அது சார்ந்த காடுகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த ஒதுகீடு பெரும் பங்காற்றும் என 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தக்கலின் போது மந்திரி பெசார் தெரிவித்தார்.


Pengarang :