SELANGOR

சிலாங்கூரின் முதலீடு 8.25 பில்லியன் வெள்ளியை எட்டியது!

ஷா ஆலம், ஜனவரி 3:

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 8.25 பில்லியன் வெள்ளி முதலீட்டை வெற்றிகரமாக எட்டியதன் வழி சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து பீடு நடைபோட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையானது வகுக்கப்பட்ட இலக்கான 7 பில்லியன் வெள்ளியைக் கடந்ததோடு 2017ஆம் ஆண்டு பெறப்பட்ட 5.59 பில்லியன் வெள்ளி முதலீட்டைக் காட்டிலும் இது மிகவும் அதிகமாகும் என்று மந்திரி பெசார் டத்தோ அமிருடின் ஷாரி கூறினார்.

“இதுவரை மொத்தம் 143 முதலீட்டு திட்டங்கள் அங்கீகரிப்பட்டுள்ள நிலையில் மலேசியாவின் மிகவும் பிரசித்திப்பெற்ற முதலீட்டு தளமாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்குகிறது.”

மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் முதலீட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதில் காணப்படும் நேர்மை, ஒருமைப்பாடு, உறுதிப்பாடு ஆகியன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மாநில அரசு கவர்ந்ததற்கான முக்கிய காரணிகளாக உள்ளன என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Pengarang :