SELANGOR

373 பேருக்கு டிங்கி காய்ச்சல்

ஷா ஆலம், ஜன.28:

இவ்வாண்டு ஜனவரி முதல் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக (எம்பிஏஜே) நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 373 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இம்மாதம் 24ஆம் தேதி வரை இக்காய்ச்சலால் ஒருவர் பலியானதாக எம்பிஏஜே தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் உசேன் தெரிவித்தார்.

இதுவரை இக்காய்ச்சல் அதிகம் பரவிய 5 இடங்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாகவும் அப்துல் ஹமிட் விவரித்தார்.

தாமான்ஸ்ரீ அங்சானா ஹிலிர் (ஸ்ரீ அங்சானா ஹுலிர் ஆடம்பர அடுக்குமாடி) பகுதியில் 17 பேர் டிங்கி காய்ச்சலால் பீடிக்கப்பட்டனர். 64 நாள்களாக இங்கு இக்காய்ச்சல் பரவியிருந்தது. அதேவேளையில், இதே கால கட்டத்தில் தாமான் புக்கிட் தெராத்தாயில் ( ஜாலான் தெராத்தாய் 1/1 – 1/7) 71 பேருக்கு இக்காய்ச்சல் கண்டிருந்தது என்று அவர் கூறினார்.

“லெம்பா ஜெயா உத்தாரா ( டேசா லெம்பா பெர்மாய் அடுக்குமாடி) பகுதியில் 44 பேர் டிங்கி காய்ச்சலால் பீடிக்கப்பட்டனர். இக்காய்ச்சல் 54 நாள்களுக்கு இப்பகுதியில் பரவியது. ஜாலான் ஜெலாத்தேக்கில் (ஸ்ரீ மாயா ஆடம்பர அடுக்குமாடி) 46 நாள்கள் பரவிய இக்காய்ச்சலால் 17 பேர் பாதிக்கப்பட்டனர். இது தாமான் கெஞ்சானாவில் ( ஜாலான் கெஞ்சானா 9,11,15,23,34/2) 33 நாள்கள் பரவிய காய்ச்சலால் 10 பேர் பாதிக்கப்பட்டனர் என்று இங்கு எம்பிஏஜே கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.


Pengarang :