SELANGOR

டிங்கி காய்ச்சல் பரவல் அதிகரிப்பு! எம்பிபிஜே உணர்ந்துள்ளது

பெட்டாலிங் ஜெயா, பிப்.4:

பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழகத்தின் புள்ளிவிபரத்தின் படி முந்தைய ஆண்டைக் காட்டிலும் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 369 பேர என 214 விழுக்காடு அதிகரித்துள்ளது..

இது இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கி 24ஆம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 126 பேர் மட்டுமே இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இந்த டிங்கி காய்ச்சல் அதிகளவு பரவும் இடங்களாக இதுவரையில் 18 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ அசிஸி முகமட் ஜெய்ன் கூறினார்.

அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பிஜேயு 10-இல் உள்ள பிரிமா டாமான்சாரா, பிஜேயு 6-இல் உள்ள பெலாங்கி டாமான்சாரா அடுக்குமாடி குடியிருப்பு, பிஜே55-இல் உள்ள டேசா மெந்தாரி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பிஜேஎஸ் 8-இல் உள்ள மெந்தாரி கோர்ட் ஆகியனவும் அடங்கும்.


Pengarang :