SELANGOR

நெகிழிப் பைகளுக்குப் பதிலாக அடுக்குப் பாத்திரங்களைப் பயன்படுத்துவீர்

கோம்பாக் , மே 20-

நெகிழிப் பைகளுக்குப் பதிலாக அடுக்கு பாத்திரங்களை சந்தைக்கு கொண்டு செல்லும் பழக்கத்தை சிலாங்கூர் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ரமலான் சந்தையில் உணவுகளை வாங்கும்போது தாம் இந்த நடைமுறையையே கடைபிடித்ததாகக் கூறியதோடு 2025ஆம் ஆண்டு வாக்கில் நெகிழி பயன்பாடற்ற மாநிலமாக சிலாங்கூரை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மஸ்டியானா முகமது கூறினார்.

“இந்த ரமலான் மாதம் முழுவதிலும் நான் அடுக்குப் பாத்திரங்களையே சந்தைக்கு கொண்டு செல்கிறேன். இதன் மூலம் உணவு சூடாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது” என்றார் அவர்.

“ரமலான் மாதத்தில் மட்டுமல்ல, இதர நாட்களிலும் மதிய உணவு வகைகளை வாங்கும் போது அடுக்குப் பாத்திரங்களையே நான் பயன்படுத்தி வருகிறேன்” என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :