Eddin Syazlee Shith
NATIONAL

பேராசிரியர்: ஜாகீர் நாயக் விவகாரத்தினால் மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவு ஒருபோதும் குறையாது

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 24:

இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்நாட்டில் தங்க அனுமதித்த அரசாங்கத்தின் முடிவு, ஒரு போதும் நடப்பு அரசாங்கத்தின் மீது மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவை பாதிக்காது என்று வடக்கு மலேசியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முகமட் அசினுடின் முகமட் சனி குறிப்பிட்டார்.

பொருளாதார ஆய்வின் அடிப்படையில்தான் நம்பிக்கைக் கூட்டணியின் நிருவாக செயல்திறனை அச்சமூகங்கள் மதிப்பீடு செய்யும் என்று அரசியல் ஆய்வாளரான அவர் குறிப்பிட்டார்.

பாஸ்- அம்னோ இனம் சார்ந்த பிரச்சனைகளில் தொடர்ந்து விளையாடுவதால் அது எங்கும் நகராது இருக்கின்றன. அதே நேரத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் நம்பிக்கைக் கூட்டணி செயலை பார்க்க விரும்புகிறார்கள்மேலும், மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லைஏனெனில் பாஸ் மற்றும் அம்னோ மலாய் மற்றும் இஸ்லாமிய பிரச்சினைகளுக்காகப் போராடுகிறார்கள்” என்று மலேசியாகினியைத் தொடர்பு கொண்ட போது அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டு மக்களின் அரசியல் மற்றும் அவர்களின் இருப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட ஜாகிர் நாயக்கின் நடவடிக்கையை மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாகிர் நாயக்கை நாட்டை விட்டு வெளியேற்றும் பரிந்துரையை அரசாங்கத் தலைவர்களும், பொது மக்களும் முன் வைத்த போதும், பிரதமர் மகாதீர் ஜாகிரை தற்காத்து, அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிராக சீனர்கள் மற்றும் இந்தியர்களின் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அரேபிய வனப்பெழுத்து, ஜாகிர் நாயக் போன்ற விவகாரங்களில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் மன உணர்வை கொஞ்சமும் நடப்பு அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை என்று பலர் குறிப்பிடும் வேளையில், அடுத்த தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகள் எங்கே யாருக்கு செல்லும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.   


Pengarang :