Exco Pembangunan Usahawan, Pembangunan Luar Bandar, Desa Dan Kampung Tradisi, Rodziah Ismail bergambar bersama Anak-anak Tabika Kemas sempena Majlis Pelancaran perintis Kemas Daerah Petaling di Dewan Teratai Seksyen 19 Shah Alam.25 Ogos 2019.Foto REMYARIFIN/SELANGORKINI.
NATIONAL

மஸ்லி மாலிக்: ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி முதல் இலவச உணவு

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 26:
நாட்டில் உள்ள 2.7 மில்லியன் ஆரம்பப்பள்ளி மாணவர்களும் ஜனவரி மாதம் தொடங்கி அரசாங்கத்தின் காலை உணவு திட்டத்தின் கீழ் இலவச உணவை பெற உள்ளார்கள் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

எவ்வகையான உணவு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகள் பள்ளிக்கு வரும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக சுங்கை பட்டாணியில் காலை உணவு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மஸ்லீபிற்பகல் அமர்வில் உள்ள மாணவர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறினார்

மாணவர்களின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு சத்தான மற்றும் சீரான காலை உணவைப் பெறுவதை உறுதி செய்வது மிக முக்கியமானது என்றும் மஸ்லீ கூறினார்.

கைகளை கழுவுதல் மற்றும் சுத்தம் செய்வது போன்ற சரியான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று மஸ்லீ தெரிவித்தார்


Pengarang :