NATIONAL

இரண்டு புதிய முகங்கள் பிஎன்பி & சைம் டர்பி நிறுவனங்களின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்கள்

கோலா லம்பூர் , ஆகஸ்ட் 30:

பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) நிறுவனம் புதிய தலைமை பொறுப்பாளரை நியமனம் செய்தது அதன் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த நடவடிக்கை சைம் டர்பி நிறுவனத்தின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும் என்று பொருளாதார ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார். பிலீப் கெப்பிட்டல் மேனேஜ்மென்ட் முதலீடு பிரிவின் மூத்த உதவித் தலைவர் டத்தோ டாக்டர் நஸ்ரி கான் அடாம் கான் வெளியிட்ட அறிக்கையில் பிஎன்பி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜாலில் ரஸ்ஸீட் நியமனம் நிர்வாகத்தில் உருமாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் விவரித்தார்.

ஜாலில் ரஸ்ஸீட் நியமனம் எதிர் வரும் அக்டோபர் 1-இல் இருந்து அமலுக்கு வரும் என பிஎன்பி நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, பிஎன்பி நிறுவனம் பிரபல தொழில் அதிபர் டத்தோ அப்துல் ரஹ்மான் அமாட் சைம் டர்பி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் அடிப்படையில் சைம் டர்பியின் வணிக வியூகம் புதிய பரிணாமத்தில் பயணிக்கும் என்ற கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறலாம்.


Pengarang :