Datuk Abdul Rashid Asari beramah mesra bersama penerima ketika Program Jom Shopping Skim Mesra Warga Emas DUN Selat Klang di Econmart Sungai Bertih Jalan Yadi pada 30 September 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

செலாட் கிள்ளான் தொகுதி: 5,000 மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டு

கிள்ளான், செப்.30-

செலாட் கிள்ளான் சட்டமன்றப் தொகுதியைச் சேர்ந்த 5,800 மூத்த குடிமக்கள் ஜோம் ஷாப்பிங் திட்டதின் கீழ் மூத்த குடிமக்களுக்கான பற்றுச்சீட்டுகளை கட்டம் கட்டமாகப் பெறவிருக்கின்றனர்.

இந்த 100 வெள்ளி பற்றுச்சீட்டுகள் செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பிறந்தவர்களுக்கு அந்தந்த மாதங்களில் வழங்கப்படும் என்று கலாச்சார, சுற்றுலா, மலாய் பாரம்பரிய துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி கூறினார்.

மீண்டும் செயல்படுத்தப்படும் மரண சகாய நிதியைத் தொடர்ந்து அமல்படுத்தப்படும் மற்றொரு மக்கள் நலத் திட்டமாக இந்த ஜோம் ஷாப்பிங் திட்டம் அமைந்துள்ளது என்றார் அவர். இந்நடவடிக்கையானது இன,சமய பேதமின்றி மூத்த குடிமக்கள் மீது மாநில அரசு கொண்டுள்ள பரிவை எடுத்துக் காடுவதாக அவர் சொன்னார்.


Pengarang :