NATIONAL

2019 ஆகஸ்ட் இறுதியில் நாட்டின் கையிருப்பு 103.49 பில்லியன் டாலர்

கோலாலம்பூர், செப்.30-

அனைத்துலக நிதி நிறுவனத்தின் (ஐ எம் எஃப்) சிறப்பு தரவு வடிவமைப்பின்படி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் நாட்டின் தேசிய கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 103.49 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

நாட்டின் கைவசமுள்ள அந்நிய நாட்டு செலாவணி சொத்துக்களின் மதிப்பு 62.04 மில்லியன் அமெரிக்க டாலர் என்று பேங்க் நெகாரா மலேசியா ஓர் அறிக்கை வழி தெரிவித்தது.

அடுத்த 12 மாதங்களுக்கு உத்தரவாத கடன் மற்றும் அந்நிய நாட்டு செலாவணியிலான வைப்பு தொகை ஆகியவற்றின் குறுகிய கால பரிவர்த்தனை மற்றும் அந்நிய நாட்டில் இருந்து அரசாங்கம் பெற்ற கடன்களுக்காக திரும்பச் செலுத்த வேண்டிய தவணை தொகை போன்றவற்றின் மொத்த தொகை 572 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அவ்வறிக்கை கூறியது.

2019 ஆகஸ்ட் மாத இறுதியில் குறுகிய காலத்தில் செலுத்த வேண்டிய 13.67 பில்லியன் அமெரிக்கம் டாலரானது நிதி சந்தையில் காணப்படும் நாட்டின் ரிங்கிட் மதிப்பை பிரதிபலிக்கிறது.


Pengarang :