NEW YORK, 25 Sept — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad (tengah) bercakap pada acara sampingan peringkat tinggi mengenai ‘Krisis Rohingya – Menuju Ke Hadapan’ yang berlangsung di ibu pejabat PBB di sini Selasa.?Mahathir tiba di New York bagi menghadiri Perhimpunan Agung Pertubuhan Bangsa-Bangsa Bersatu (UNGA) Sesi ke-74.?–fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA??NEW YORK, Sept 25 — Prime Minister Tun Dr Mahathir Mohamad (centre) addressing at the high-level side event on the ‘Rohingya Crisis – A Way Forward’ at the United Nations (UN) headquarters here on Tuesday.?Dr Mahathir is in town for the 74th Session of the UN General Assembly.?–fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
NATIONAL

வேதமூர்த்தி: மலாய் இன தன்மான மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை

கோலா லம்பூர், அக்டோபர் 3:

மலாய் இன தன்மான மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அனுமதியை பெற அவசியம் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார். தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான அவர் கூறுகையில், டாக்டர் மகாதீர் மலாய் சமூகத்துடன் பேச விரும்புகிறார்அது ஒரு பிரச்சனை அல்ல என்று கூறினார்.

முன்னதாகமலேசியர்கள் அனைவருக்கும் பிரதமராக இருக்கும் டாக்டர் மகாதீர் காங்கிரசில் பங்கேற்பது பொருத்தமற்றது என்று பாாக்காத்தான் ஹாராப்பான்  கூட்டணியின் சில கட்சித் தலைவர்கள்  விவரித்துள்ளனர்.

இதற்கிடையில்அண்மையில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் இறந்ததைத் தொடர்ந்து அவரை அமைச்சரவையில் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தமைக்காக வேதமூர்த்தி பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

பணிநீக்கம் செய்ய அழுத்தம் இருந்தபோதிலும்டாக்டர் மகாதீர்வேதமூர்த்தி பிரதமர் துறையில் அமைச்சராக இருப்பார் என்று இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முகமட் அடிப் மரண விசாரணை குறித்து முழு அறிக்கையைப் பெற்ற பின்னர் இது குறித்து ஆராயப்படும் என்று டாக்டர் மகாதீர் ஜனவரி மாதம்  கூறியதாகக் கூறப்படுகிறது.


Pengarang :