Dato’ Seri Mohamed Azmin Ali menyampaikan ucapan ketika Persidangan Perdagangan ASEAN Selangor sempena Persidangan Kemuncak kali ke-3 2019 pada 10 Oktober 2019.Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

நாட்டின் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது!

கோலாலம்பூர், அக்.11:

நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு முதல் அரையாண்டில் 4.7 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்திருப்பது அது வலுவுடன் இருப்பதைக் காட்டுகிறது.
அதேவேளையில், நேரடி வெளிநாட்டு முதலீடும் 97.2 விழுக்காடு உயர்ந்து 49.5 பில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.

ஆயினும், அமெரிக்கா – சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையற்ற பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகவும் நிதானமாக எடுத்து வருகிறது என்றார் அவர்.

ஆசியானில் தோன்றியுள்ள புதிய பொருளாதாரமானது 2018ஆம் ஆண்டில் தொழிற்சாலை ஏற்றுமதி 13 விழுக்காடு உயர்ந்ததால், அது மொத்த ஏற்றுமதியின் வளர்ச்சி 81.6 விழுக்காட்டை அடைந்ததற்கு பெரும் பங்களித்துள்ளது என்றும் அஸ்மின் விளக்கினார்.


Pengarang :