Dr Mohd Yusri Ibrahim ketika sesi Seminar PRK Tanjung Piai di Bilik Mesyuarat Dekan 2 Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

மேல்கல்வியைத் தொடர்வதற்கான சிறந்த தடம் யுனிசெல்

ஷா ஆலம், நவம்பர் 6:

உயர்க்கல்வி மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர்வதற்கு சரியான தடமாக சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) திகழ்கிறது.
மாநில அரசாங்கத்தின் பல்கலைக்கழகமான இதன் உருமாற்றமும் ஆற்றலும் சிறந்த மாணவர்களை உருவாக்கும் என்று பல்கலைக்கழக தலைவரும் துணை வேந்தருமான பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரெட்சுவான் ஒஸ்மான் கூறினார்.

நியாயமான கட்டணத்தை விதிப்பதோடு இதன் 2 வளாகங்களிலும் அனைத்து வசதிகளும் உள்ளன என்ரும் அவர் சொன்னார்.
“தரம் என்ற கோணத்தில் பார்த்தால், யுனிசெல் பல்கலைக்கழகமே மலேசியாவில் முதன் முதலில் ஐஎஸ்ஒ தர சான்றிதழையும் இஒஎம்எஸ் தர சான்றிதழையும் ஏக காலத்தில் பெற்ற பல்கலைக்கழகமாகும்” என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.


Pengarang :