NATIONAL

முறையான அங்கீகாரம் பெறாத 58 தொடர்பு சாதனங்கள் பறிமுதல்!

சைபர்ஜெயா, நவ.18-

நான்கு மாநிலங்களில் கடந்த ஜூலை தொடங்கி அக்டோபர் வரையில் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அங்கீகாரம் பெறாத 53 தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (எஸ்கேஎம்எம்) தெரிவித்தது.

கோலாலம்பூர், கெடா, பேராக் மற்றும் பினாங்கு ஆகியவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களில் அண்டேனா, சிக்னல் பூஸ்டர், கம்பியில்லா டிவி ஒளிபரப்பு சாதனம், ஏவி சாதனம், அண்டுரோய்ட் டிவி பெட்டி, வாக்கி டாக்கி மற்றும் ஆர்எஃப் ரிப்பீட்டர் போன்றவையும் அடங்கும்.
இந்தப் பொருட்கள் யாவற்றையும் காவல் துறை முதலில் பறிமுதல் செய்த பின்னர் தொடர் விசாரணை நடவடிக்கைக்காக ஆணையத்திடம் ஒப்படைத்தது என்று அதன் அறிக்கை கூறியது.

இந்த வழக்கு 2000 தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 16ஆவது பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சம் 100,000 ரிங்கிட் அபராதம் அல்லது கூடிய பட்சம் 6 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


Pengarang :