Amirudin Shari pada sidang media selepas Majlis Perasmian Projek Tebatan Banjir di Padang Jawa, Klang, pada 26 November 2019. Foto ASRI SAPFIE/SELANGORKINI
SELANGOR

சாலைகள் சீரமைப்புகளுக்காக சிலாங்கூர் அரசு ரிம.179 மில்லியன் ஒதுக்கீடு

கிள்ளான், நவ.26-

மாநிலம் முழுவதிலும் உள்ள சாலைகளைப் பழுது பார்க்கும் பணிகளுக்கான பொதுபணி துறைக்கு 179 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டிற்கான மலேசிய சாலைகள் தகவல் தரவு முறைக்காகவும் (மார்ரிஸ்) இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதேவேளையில், மாநில சாலைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் நீளமான கூட்டுரசு சாலைகளின் சீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு அதிகளவிலான ஒதுக்கீட்டை அளிக்கும் என மாநில அரசு காத்திருப்பதாக அவர் சொன்னார்.
“மாநில அரசாங்கத்தை பொருத்த மட்டில் ‘மார்ரிசு’க்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தம் . ஒரு காசைக் கூட நாங்கள் மீதம் வைக்கப்போவதில்லை” என்றார் அவர்.


Pengarang :