NATIONAL

1எம்டிபி நிதி முறைகேடு: பிபிஆர்எஸ் ரிம.1 மில்லியன் உரிமை பறிமுதல் வழக்கில் ஜனவரி தீர்ப்பு

கோலாலம்பூர், நவ.28-

1எம்டிபி ஊழல் நடவடிக்கையுடன் தொடர்புபடுத்தப்படும் பார்ட்டி பெர்சத்து ரக்யாட் சபாவின் 1 மில்லியன் ரிங்கிட் மீதான உரிமையை பறிமுதல் செய்வதற்கான வழக்கின் தீர்ப்பு அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி வழங்கப்படும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பின்னர் நீதி ஆணையர் டத்தோ அகமது ஷாஹ்ரிர் முகமது சாலே இத்தேதியை நிர்ணயித்தார். இவ்வழக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை துணை பப்ளிக் பிராசிகியுட்டர் ஃபாரா யாஸ்மின் பிரதிந்திக்கும் வேளையில் பிபிஆர்எஸ் சார்பில் வழக்கறிஞர் கே. லாவினியா வாதிடுகிறார்.

முன்னதாக, இரு தரப்பும் தங்கள் வாதங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளதாக நீதி ஆணையர் ஃபாரா யாஸ்மின் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தொகை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வங்கி கணக்கில் இருந்து இக்கட்சிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக சட்டவிரோத நிதி பரிவர்த்தனை சட்டத்தின் (அம்லா) கீழ் இந்நடவடிக்கை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


Pengarang :