NATIONAL

மக்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை செலவீனங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும்- முஹீடின்

பேங்காக், நவம்பர் 29:

அரசாங்கம் நாட்டின் மக்கள் குறிப்பாக பி40 வர்கத்தினர் எதிர் கொள்ளும் வாழ்க்கை செலவீனங்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறது என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் கூறினார். அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள், இலாகாகள் மற்றும் அரசு இயங்திரங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை செலவீனங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். மக்களின் வருமானத்தை பெருக்கவும் வழிவகைகள் மத்திய அரசாங்கம் தேடி வருகிறது என்று உறுதி கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தலைமையிலான தேசிய வாழ்க்கை செலவீன நடவடிக்கை மன்றத்தின் வழி செயல் திட்டங்கள் வரைந்து மக்களின் பாரத்தை குறைக்க முயற்சித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.


Pengarang :