LANGKAWI, 9 Dis — Menteri Pembangunan Luar Bandar Datuk Seri Rina Mohd Harun bergambar bersama para pelajar sekolah dan ibu bapa yang hadir pada Majlis Pelancaran Program Back To School 2020 bersama Yayasan Pelajaran MARA di MRSM Langkawi hari ini. Bagi Parlimen Langkawi seramai 1000 pelajar dari 28 buah sekolah menerima bantuan berjumlah RM88,000. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தில் 43,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர்

லங்காவி, டிச.9-

மாரா அறிக்கட்டளை ஏற்பாட்டிலான 2020 மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதிலும் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த 43,500 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் பயனடைவர்.

இத்திட்டம் வெற்றி பெறுவதற்கு தனியார் துறை வழங்கிய நிதி ஒத்துழைப்பின் மூலம் மொத்தம் 3.2 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக புற நகர் மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா முகமது ஹாருண் கூறினார்.

உதவி பெறும் மாணவர்கள் யாவறும் பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்வதில் மாவட்ட கல்வி இலாகா மற்றும் உள்ளூர் சமூக இலாக ஒத்துழைப்பு நல்கியதாக அவர் குறிப்பிட்டார்.

லங்காவியில் எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் நடைபெற்றுள்ள நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் மேற்கண்ட தகவல்களை அமைச்சர் தெரிவித்தார்.


Pengarang :