NATIONAL

உணவங்களில் புகைப்பிடிக்கத் தடை: நாடு முழுவதிலும் 605 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன!

ஷா ஆலம், ஜன.2-

நாடு முழுவதிலும் உள்ள உணவகங்கள் மற்றும் அங்காடிக் கடைகளில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை மீறியதற்காக 605 குற்ற அறிக்கைகள் அளிக்கப்பட்ட வேளையில் மொத்தம் 144,450 ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதில் 34 அறிக்கைகள் வயது குறைந்த நபர்களுக்கு அளிக்கப்பட்டதாக மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஜனவரி முதல் தேதி காலை மணி 8க்கு ஒரே நேரத்தில் தொடங்கிய அதிரடி சோதனை நடவடிக்கையில் 2,087 அமலாக்க அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர் என்று 6,119 உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, விதிமுறைகளை மீறிய குற்றத்தின் பேரில் 103 உணவக உரிமையாளர்களுக்கு குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதோடு அதன் மூலம் 25,750 ரிங்கிட் மதிப்புள்ள அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையில், புகைப்பிடிக்கத் தடை விதிக்கும் அறிவிப்பு பலகை பொருத்தாத குற்றத்திற்காக 79 குற்ற அறிக்கைகளும் சிகரெட் சாம்பலை போடுவதற்கான தட்டுகளைத் தயார் செய்திருந்த குற்றத்திற்காக 24 அறிக்கைகளும் வழங்கப்பட்டன என்றார் அவர்.


Pengarang :