NATIONAL

ஐந்தாண்டு கால கட்டத்தில் மலேசியாவில் புற்று நோய் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், ஜன.3-

2012ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரையிலும் மலேசியாவில் புற்று நோய் கண்டோரின் எண்ணிக்கை 115,238 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது 2007ஆம் ஆண்டு தொடங்கி 2011ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இந்நோய் புதிததாகக் கண்டோரின் எண்ணிக்கையான 103,507ஐக் காட்டிலும் அதிகமாகும்.

இக்கால கட்டத்தில் 10 வகையான புற்றுநோய்களில் குறிப்பாக மார்பக புற்றுநோய் கண்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். 2012 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில் புற்று நோய் கண்டோரின் விகிதாச்சாரமானது ஒரு லட்சம் ஆண்களில் 86 பேர், ஒரு லட்சம் பெண்களில் 102 பேர் புற்று நோய்க்கு ஆளாகியிருந்தனர் என்றார் அவர்.

“மலேசிய மக்களிடையே 10 வகையான புற்று நோய் காணப்படுகிறது. அதில் மார்பக புற்று நோய், மலக் குடல் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய், இரத்த புற்று நோய், ஈரல், கர்ப்பப் பை புற்று நோய் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன” என்றும் அவர் சொன்னார்.
மலேசிய தேசிய புற்று நோய் பதிவு அறிக்கை புள்ளி விவரப்படி ஆண்களில் பெரும்பாலோருக்கு மலக் குடல் புற்று நோயும் அதற்கடுத்த நிலையில் நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் புற்று காணப்படும் வேளையில் பெண்களில் பெரும்பாலோருக்கு மார்பக புற்றுநோய், மலக் குடல் மற்றும் கர்ப்பப் பை புற்று நோய் அதிகளில் கண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.


Pengarang :