NATIONAL

பல்லின கலாச்சாரத்தை அறிந்து கொள்ள பொங்கல் கொண்டாட்டம் வழி வகுக்கும்! -அஸ்மின் அலி

கோலாலம்பூர், ஜன.15-

பொங்கல் திருநாளானது மலேசியாவில் வாழும் இந்தியச் சமூகத்தினரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் இதர இனத்தவர்கள் அதிகமாக அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

“இப்பண்டிகையானது அறுவடை காலத்தின் முடிவை குறிக்கிறது. இந்தக் கொண்டாட்டமானது மலேசியாவில் பல்லினச் சமூகம் இணைந்து ஒற்றுமையாக வாழும் தனித் தன்மைமிக்க மலேசிய சமூகத்தின் தனிச் சிறப்பை வெளிப்படுத்தும் ஓர் ஆதாரமாகும்” என்றார் அவர்.
“தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது” என்றார்.

. பல்வேறு கலாச்சாரத்தின் தொகுப்பாக மலேசியா அமைந்துள்ளதே அதன் வலிமை ஆகும் என்று அஸ்மின் அலி கூறினார்.


Pengarang :