NATIONAL

டோல் கட்டணக் குறைப்பு: மக்கள் பயனடையத் தொடங்கியுள்ளனர்!

மலாக்கா, பிப்.4-

பிளஸ் நெடுஞ்சாலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் வாகனமோட்டிகள் கடந்த பிப்ரவரி முதல் தேதி தொடங்கி டோல் கட்டணம் 18 விழுக்காடு குறைக்கப்பட்டதால் பெரும் பயன் அடைந்து வருகின்றனர்.
ஜோகூரில் இருந்து மலாக்காவிற்கு அன்றாடம் பயணிக்கும் மூன்று குழந்தைகளுக்கு தாயான நுர் ஃபாஸ்யிடா வாஹிட் (வயது 35) , இக்கட்டண குறைப்பு தனது அன்றாட செலவினத்தை குறைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“மகன் தங்காக்கில் உள்ள ஒரு பள்ளியில் பயில்கிறார். நான் என் பெற்றோருடன் மலாக்காவில் வசிக்கிறேன். தங்காக் டோல் சாவடியில் இருந்து ஆயர் குரோ டோல் சாவடி வரை செல்ல ஒரு வழிக் கட்டணமாக ரிம.3.80 செலுத்தி வந்தேன். இப்போது ரிம, 3.12 மட்டுமே செலுத்துகிறேன். மாதம் ரிம30 ஐ சேமிக்க இயலும்” என்றார் அவர்.

இந்த 30 ரிங்கிட்டை மற்ற செலவுகளுக்கு நான் பயன்படுத்தலாம். என்னைப் போன்று தினமும் நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோருக்கு இக்கட்டணக் குறைப்பு நிச்சயம் பேருதவியாய் அமைந்திருக்கும் என்கிறார் தனித்து வாழும் தாயான நூர் கூறினார்.


Pengarang :