ADN Batangkali, Harumaini Omar ketika Majlis Perasmian Penutup Kejohanan Golf Majlis Sukan Sekolah Selangor di Bukit Beruntung Golf Resort, Rawang pada 13 Februari 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

உலு சிலாங்கூர் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்!

ரவாங், பிப்.14-

மக்களை வளப்படுத்தும் இலக்கிற்கு ஏற்ப உலு சிலாங்கூர் பகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மீது கவனம் செலுத்தப்படுகிறது என்று பாத்தாங் காலி சட்டமன்ற உறுப்பினர் ஹாருமைனி ஓமார் கூறினார். போதுமான ஒதுக்கீடு இருந்தால் நடப்பு வசதிகளின் தரம் உயர்த்துவதற்கு தமது தரப்பு திட்டமிடுவதாக அவர் சொன்னார்.

சுகாதார வசதிகள் மற்றும் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவான சுற்றுச் சூழலைத் தயார் செய்வது குறித்தும் ஆராயப்படுகிறது என்றார் அவர்.
மாணவர்களின் அடைவு நிலையைப் பாதிக்கும் அளவில் உள்ள சில பள்ளிகளை தாம் அடையாளம் கண்டுள்ளதாக என்று புக்கிட் ப்ருந்தோங் கோல்ஃப் அண்ட் கன்றி ரிசோர்ட்டில் நடைப்பெற்ற சிலாங்கூர் பள்ளி விளையாட்டுப் போட்டியை முடித்து வைத்து ஆற்றிய உரையில் .ஹருமைனி தெரிவித்தார்.


Pengarang :