Setiausaha Bahagian Pengurusan Maklumat, Pejabat Setiausaha Kerajaan Negeri Selangor, Fazlina Hashim (tengah) bersama Timbalan Presiden dan Timbalan Naib Cancelor, Prof Dr Mohd Nor Nawawi (kanan) dan Dekan Fakulti Komunikasi, Seni Visual dan Pengkomputeran UNISEL, Dr Haslinda Sutan Ahmad Nawi (kiri) merasmikan Majlis Perasmian ICT Boot Camp 2019 & ICT Week 2020 bertempat di UNISEL Bestari Jaya pada 19 Februari 2020. Foto FILZAH YAMAL/SELANGORKINI.
SELANGOR

2019 விவேக மாநில இலக்கு: டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும்

பெஸ்தாரி ஜெயா, பிப்.19-

2025ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கு இலக்கை நிறைவேற்றும் வகையில், நகர் மற்றும் புற நகர் பகுதி மாணவர்களுக்கு இடையிலான டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க மாநில அரசு எண்ணம் கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப உலகம் மற்றும் தொழில்துறை புரட்சி 4.0 ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு 2019 சிலாங்கூர் ஐசிடி முகாம் நிகழ்ச்சியை சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக மாநில செயலக தகவல் நிர்வாகப் பிரிவு செயலாளர் ஃபாஸ்லினா ஹாஷிம் கூறினார்.

புற நகர் பகுதி இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வௌ ஏற்படுத்த உதவும் 2019 ஐசிடி முகாம் நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தும் இரு பல்கலைக்கழகங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர், இந்நடவடிக்கைகளின் மூலம், தொழில்நுட்பத் துறைக்கு தேவையான மனித மூல தனத்தையும் நிறப்புவதோடு டிஜிட்டல் இடைவெளியையும் குறைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :