NATIONAL

எஸ்பிஆர்எம் தலைவர் பதவியில் இருந்து விலகினார் லத்தீபா கோயா

கோலாலம்பூர், மார்ச் 9:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைவர் பதவியில் இருந்து லத்தீபா கோயா விலகினார்.
தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் டான்ஸ்ரீ முகிதீன் யாசினிடம் தான் அனுப்பியதை லத்தீபா இன்று உறுதிப்படுத்தினார். அக்கடிதத்தை திங்கட்கிழமை தான் பிரதமருக்கு அனுப்பியதாகக் குறிப்பிட்ட லத்தீபா இது தான் சொந்தமாக எடுத்த முடிவாகும் என்று அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தனக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை லத்தீபா திட்டவட்டமாக மறுத்தார். தனது அதிகாரிகள் மற்றும் பிரதமரின் முழு ஒத்துழைப்பின் கீழ் எஸ்பிஆர்எம் ஊழல் விவகாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :