Dr Siti Mariah Mahmud berucap ketika Majlis Apresiasi Sedekad Pusat Wanita Berdaya di Shah Alam Convention Centre, Shah Alam pada 7 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

இதர மாநிலங்களையும் கவர்ந்துள்ள மகளிர் மேம்பாட்டு மையம்

ஷா ஆலம், மார்ச் 9:

மகளிர் மேம்பாட்டு மையத்தின் மூலம் பல பெண்கள் மேம்பாடைந்துள்ளதை கண்டு இதர மாநிலங்களும் இத்திட்டத்தினால் கவரப்பட்டுள்ளன என்று மகளிர் மேபாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாஹ்முட் கூறினார். சமுதாய அளவிலான ஒரு திட்டத்தைக் கொண்டுள்ள முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது என்றார் அவர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து 56 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மகளிரைப் பங்கெடுக்கச் செய்து பல்வேறு வகையான பயிற்சிகளைப் பயிற்றுவிக்கும் அமைப்பாக இம்மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.

“இத்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு, ஆற்றல், தலைமைத்துவ ஆற்றல் ஆகியவற்றோடு ஆர்வமுள்ளோருக்கு அரசியல் துறைச் சார்ந்த சட்டக் கல்வியும் போதிக்கப்படுகின்றது” என்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் சித்தி தெரிவித்தார்.


Pengarang :